Sunday, January 5, 2020

குட்டி கதை

சென்னை மாநகரில்  ஒரு அலுவலகம் அதில் கல்யாணமான மற்றும் ஆகாத ஆண்கள் பெண்கள் என்று பலரும் பணி புரிகிறார்கள்.  அதில் ஒரு சிலருடைய வாழ்க்கை இன்னொருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒருவர் பெயர் பாபு, கல்யாணம் ஆனவர் அவர் அலுவல் முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார் வழியில் போக்குவரத்து நெரிசல் பள்ளம் மேடு என்று  எல்லாம் கடந்து  ஒரு வழியாக வீட்டை அடைந்தார். வீட்டில் அவருடைய அப்பா அம்மா மனைவி மற்றும் ஒரு குழந்தை  வசிக்கின்றனர். குழந்தை படு சுட்டி. அவருடைய மனைவி வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு, கல்வி என்று எப்பொழுதும் பரபரப்பாக ஓய்வு இல்லாமல் ஏதாவது செய்து கொண்டிருப்பவர் அன்று  தன் கணவன் வந்ததும் அவருக்கு காபி கொடுத்து  விட்டு, சமையல் அறையில் சிறிது வேலை இருக்கிறது கொஞ்சம் குழந்தையுடன் இருங்கள் என்று கூறுகின்றாள். அவருக்கு உடனே கோவம் வருகிறது, எனக்கு பதில் நீ வேலைக்கு செல்கிறாயா என்று கேட்கிறார், அலுவலக வேலை முடிந்து களைத்து வந்து இருக்கிறேன் என்னிடம் சொல்கிறாய் என்று கடுமையாக பேசுகிறார் உடனே அவருடைய அம்மாவும் தன் பிள்ளைக்காக கடுமையாக பேசுகிறார், பேசின அனைவரும் வாக்குவாதம் முடிந்து அவர் அவர்கள் whatsapp fb என்று தங்களை பரபரப்பாக ஆக வைத்து கொண்டனர். அந்த பெண் கண்ணீருடன் குழந்தை, சமையல் வேலை என்று தானே எல்லாவற்றையும் கவனித்து கொள்கிறாள். அந்த அலுவலகத்தில் இன்னொரு பெண்ணின் கதை அவள் பெயர் சுபா கல்யாணமான பெண் அவளும் பாபுவை போன்றே போக்குவரத்து நெரிசல் பள்ளம் மேடு என்று எல்லாவற்றையும் கடந்து வீட்டை அடைந்தார் அவளுடைய இல்லத்தில் மாமனார் மாமியார் கணவன் மற்றும் இரு குழந்தைகள். வீட்டிற்குள் நுழைந்தும் அம்மா என்று ஓடிவந்து பசிக்கிறது அது வேண்டும் இது வேண்டும் என்று கூறுகிறார்கள். களைப்பு பற்றி எல்லாம் யோசிக்காமல் சமையல் அறைக்கு சென்று உணவு தயாரிக்கும் அந்த பெண்ணிற்கு, காத்திருக்கின்றன பல வேலைகள். அவளுடைய இல்லத்திலும் இதற்காக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அவள் முடியவில்லை என்று கூறினாள் ஒரே வார்த்தை  வேலையை விட்டு விடு என்று கூறுவார்கள். அவளுக்கும் வேலையை விட வேண்டும் என்று தோன்றும் அப்பொழுது அவளுடைய தோழி நினைப்பு வந்துவிடும், அவள் பெயர் பிரியா தன்னுடன் வேலை பார்த்தவள் அவளுடைய இல்லத்திலும் இதே பிரச்சினை அதனால் வேலைக்கு செல்வதைக் நிறுத்தி விட்டு தன் பிள்ளைகள் வீட்டு வேலை என்று இருக்கிறாள்  ஆனால் ஏன் விட்டோம் என்று கவலைப் படுகின்றாள் அதற்கு காரணம் வீட்டு செலவு, கணவனிடம் கேட்கும் பொழுது செலவிற்கான சரியான காரணம் இல்லை என்றால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டும். தன் தோழி கூறியதை மனதில் நினைத்து சுபா தன் களைப்பை பொருட்படுத்தாமல் வீட்டு வேலை செய்கிறாள். சுபாவின் இல்லத்திற்கு ஒரு கோப்பு கொடுக்க சென்ற பாபு அவள் பரபரப்பாக வீட்டு வேலைகளை செய்வதை பார்த்து  தன் மனைவியிடம் இவ்வளவு நாள் தான் நடந்து கொண்ட முறையை எண்ணி வருந்தினார். அன்றிலிருந்து அவர் இல்லத்தில் ஆனந்தம் பொங்கியது.

No comments:

Post a Comment