Sunday, January 5, 2020
கண்ணோட்டம்
காமராஜர் நகரில் வசிக்கும் சரோஜா மற்றும் வசந்தா எனும் இரண்டு பெண்மணிகள் ஒன்றாக கடைத்தெருவிற்கு சென்றனர். அங்கு தங்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளையும் வாங்கி கொண்டு வீடு திரும்பினர். அன்று கடை தெருவில் நடந்த விஷயங்களை பற்றி அவர் அவர்கள் வீட்டில் அந்த பெண்கள் தெரிவித்தனர். சரோஜா தன் குடும்பத்தினரிடம் வசந்தாவை பற்றி வினவினாள், அவள் இன்று காய்கறி வியாபாரம் செய்பவரிடம் பேரம் பேசி பொருளை வாங்கிய விதம் எனக்கு மிகவும் வேதனையை அளித்தது. ஓட்டலில் டிப்ஸ் தருகிறோம், பெரிய கடைகளில் கூறிய விலைக்கு அப்படியே பொருளை வாங்குகிறோம் ஆனால் தெருவில் வெயில் மழை பாராமல் விற்கும் வியாபாரிகளிடம் நாம் பேரம் பேசுகிறோம் என்று கூறி வருந்தினாள். மேலும் விநாயகர் சிலையை வாங்குவதிலும் சிக்கனம் செய்தாள், இன்று ஒருவர் எங்களிடம் கையேந்தி நின்றார் ஆனால் அவரை கண்டும் காணாமல் சென்று விட்டாள் என்று அனைவரிடமும் கூறி புலம்பினாள். வசந்தாவின் வீட்டில், சரோஜாவை பற்றியும் இன்று கடை தெருவில் பொருளின் விலையை விட அதிகமான பணத்தை அவள் அளித்தது பற்றியும் வசந்தா கூறி கொண்டு இருந்தாள். பணம் இருப்பவர்கள் இப்படி அள்ளி கொடுத்தால் பணம் இல்லாதவர்களிடத்திலும் வியாபாரிகள் இதையே எதிர்பார்பார்கள். பெறிய பெறிய கடைகளில் நல்ல வசதி உள்ளவர்கள் தான் வருவார்கள் அங்கு இப்படி நடப்பதால் பெறிய பாதிப்பு இல்லை ஆனால் ஏழை எளிய மக்கள் சென்று வியாபாரம் செய்யும் இடங்களில் நாம் இப்படி செய்தால் அது அவர்களையும் பாதிக்கும் என்று கூறி வருந்தினாள். மேலும் அவள் விலை உயர்ந்த வண்ண வண்ண ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலையை வாங்கினாள். அந்த காலத்தில் பெரியவர்கள் களி மண்ணால் ஆன விநாயகரை ஏரி குளங்களில் கரைத்தார்கள் அதற்கு காரணம் ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை அடித்து சென்று விடும். இதனால் நிலத்தடி நீரும் குறைந்து விடும் என்று யோசித்து ஆடி முடிந்து வரும் ஆவணி மாத சதுர்த்தியில் விநாயகரை களி மண்ணால் செய்து வழிபட்டு,சதுர்த்தி முடிந்து மூன்றாவது நாளில் ஆற்றில் கரைக்கும் வழக்கத்தை கொண்டு வந்தனர். ஏனென்றால் மண் ஈரப்பதமாக இருந்தால் ஆற்று நீரில் அடித்து சென்று விடும் என்பதால் மண் நன்றாக இறுகியவுடன் ஆற்றில் கரைத்தார்கள். இப்படி செய்வதால் கடினமான மண் நீரின் அடியில் படிந்து ஆற்று நீரை தக்கவைத்துக் கொண்டு நிலத்தடி நீரை உயர்த்திவிடும் என்று யோசித்து முன்னோர்கள் அப்படி செய்தனர்.
ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் இதை எல்லாம் யோசிக்காமல் ஆடம்பரத்திற்காக வண்ண ரசாயணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் தண்ணீர் மாசுபடுவது மட்டும் இல்லாமல் எதிர்கால சந்ததியினர்க்கும் தீங்கு விளைவிக்கின்றார்கள் என்று நினைக்கும் பொழுது மனம் பதைக்கின்றது.மேலும் இன்று ஒருவர் எங்களிடம் கையேந்தி நின்றார் அவர் அஜானுபாகுவாக இருந்தார். உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தன்னுடைய சோம்பேறித்தனத்தால் கையேந்துபவரை நாம் ஊக்குவிக்க கூடாது. வயதானவர்கள் ஊனமுற்றவர்களுக்கு செய்யலாம் ஆனால் இன்று சரோஜா அந்த மனிதருக்கு பணம் அளித்தது பிடிக்கவில்லை என்று புலம்பினாள். இதிலிருந்து நம் பார்வையில் இருந்து தவறு என்று தெரியும் ஒரு விஷயம் மற்றவர்கள் கண்ணோட்டத்தில் எப்படி நினைக்கிறார்கள் என்று பார்க்க தவறுகிறோம். இருவரும் அடிப்படையில் நல்லவர்கள் தான் பார்க்கும் கண்ணோட்டம் வேறு, நல்ல நட்புடன் உள்ள இவர்கள் இதை பகிர்ந்து கொண்டிருந்தால் இருவரின் அனுகுமுறையும் ஒன்றாக மாறியிருக்கும். நமக்கு எதற்கு வம்பு நாம் சரியாக இருக்கிறோமா அது போதும் என்று பலர் நினைப்பதால் தான் பல நல்ல விஷயங்கள் அழிந்துவிடுகிறது.
குட்டி கதை
சென்னை மாநகரில் ஒரு அலுவலகம் அதில் கல்யாணமான மற்றும் ஆகாத ஆண்கள் பெண்கள் என்று பலரும் பணி புரிகிறார்கள். அதில் ஒரு சிலருடைய வாழ்க்கை இன்னொருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒருவர் பெயர் பாபு, கல்யாணம் ஆனவர் அவர் அலுவல் முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார் வழியில் போக்குவரத்து நெரிசல் பள்ளம் மேடு என்று எல்லாம் கடந்து ஒரு வழியாக வீட்டை அடைந்தார். வீட்டில் அவருடைய அப்பா அம்மா மனைவி மற்றும் ஒரு குழந்தை வசிக்கின்றனர். குழந்தை படு சுட்டி. அவருடைய மனைவி வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு, கல்வி என்று எப்பொழுதும் பரபரப்பாக ஓய்வு இல்லாமல் ஏதாவது செய்து கொண்டிருப்பவர் அன்று தன் கணவன் வந்ததும் அவருக்கு காபி கொடுத்து விட்டு, சமையல் அறையில் சிறிது வேலை இருக்கிறது கொஞ்சம் குழந்தையுடன் இருங்கள் என்று கூறுகின்றாள். அவருக்கு உடனே கோவம் வருகிறது, எனக்கு பதில் நீ வேலைக்கு செல்கிறாயா என்று கேட்கிறார், அலுவலக வேலை முடிந்து களைத்து வந்து இருக்கிறேன் என்னிடம் சொல்கிறாய் என்று கடுமையாக பேசுகிறார் உடனே அவருடைய அம்மாவும் தன் பிள்ளைக்காக கடுமையாக பேசுகிறார், பேசின அனைவரும் வாக்குவாதம் முடிந்து அவர் அவர்கள் whatsapp fb என்று தங்களை பரபரப்பாக ஆக வைத்து கொண்டனர். அந்த பெண் கண்ணீருடன் குழந்தை, சமையல் வேலை என்று தானே எல்லாவற்றையும் கவனித்து கொள்கிறாள். அந்த அலுவலகத்தில் இன்னொரு பெண்ணின் கதை அவள் பெயர் சுபா கல்யாணமான பெண் அவளும் பாபுவை போன்றே போக்குவரத்து நெரிசல் பள்ளம் மேடு என்று எல்லாவற்றையும் கடந்து வீட்டை அடைந்தார் அவளுடைய இல்லத்தில் மாமனார் மாமியார் கணவன் மற்றும் இரு குழந்தைகள். வீட்டிற்குள் நுழைந்தும் அம்மா என்று ஓடிவந்து பசிக்கிறது அது வேண்டும் இது வேண்டும் என்று கூறுகிறார்கள். களைப்பு பற்றி எல்லாம் யோசிக்காமல் சமையல் அறைக்கு சென்று உணவு தயாரிக்கும் அந்த பெண்ணிற்கு, காத்திருக்கின்றன பல வேலைகள். அவளுடைய இல்லத்திலும் இதற்காக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அவள் முடியவில்லை என்று கூறினாள் ஒரே வார்த்தை வேலையை விட்டு விடு என்று கூறுவார்கள். அவளுக்கும் வேலையை விட வேண்டும் என்று தோன்றும் அப்பொழுது அவளுடைய தோழி நினைப்பு வந்துவிடும், அவள் பெயர் பிரியா தன்னுடன் வேலை பார்த்தவள் அவளுடைய இல்லத்திலும் இதே பிரச்சினை அதனால் வேலைக்கு செல்வதைக் நிறுத்தி விட்டு தன் பிள்ளைகள் வீட்டு வேலை என்று இருக்கிறாள் ஆனால் ஏன் விட்டோம் என்று கவலைப் படுகின்றாள் அதற்கு காரணம் வீட்டு செலவு, கணவனிடம் கேட்கும் பொழுது செலவிற்கான சரியான காரணம் இல்லை என்றால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டும். தன் தோழி கூறியதை மனதில் நினைத்து சுபா தன் களைப்பை பொருட்படுத்தாமல் வீட்டு வேலை செய்கிறாள். சுபாவின் இல்லத்திற்கு ஒரு கோப்பு கொடுக்க சென்ற பாபு அவள் பரபரப்பாக வீட்டு வேலைகளை செய்வதை பார்த்து தன் மனைவியிடம் இவ்வளவு நாள் தான் நடந்து கொண்ட முறையை எண்ணி வருந்தினார். அன்றிலிருந்து அவர் இல்லத்தில் ஆனந்தம் பொங்கியது.
Subscribe to:
Comments (Atom)